'இந்திய' அணியின் முழுநேர 'கேப்டன்' பொறுப்பினை ஏற்கத் தயார்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 29, 2018 05:45 PM
AsiaCup2018: Will be ready for Captaincy says Rohit Sharma

நேற்று நடைபெற்ற ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி, 7-வது முறையாக கோப்பையை வென்றது.

 

ஆட்டத்துக்குப்பின் கேப்டன் ரோஹித் சர்மா ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் இந்திய அணிக்கு முழுநேர கேப்டனாக வரத்தயாராக இருக்கிறீர்களா? என கேட்கப்பட்டது.அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா,'' உண்மையில் தயாராக இருக்கிறேன். எனது தலைமையில் ஏற்கனவே கோப்பையை வென்று விட்டோம். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் நான் கேப்டன் பொறுப்பு ஏற்கத் தயாராக இருக்கிறேன்.

 

கேப்டனாக தலைமை ஏற்க இருப்பவர் சகவீரர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைப்பவராக இருக்க வேண்டும், பதற்றத்தையும், நாளை விளையாடுவோமா என்ற அச்சமான சூழலையும் உண்டாக்கக் கூடாது.நாங்கள் துபாய் வந்த உடனே நான் தினேஷ் கார்த்திக், அம்பதி ராயுடு இருவருக்கும் நீங்கள் இந்த தொடர் முழுவதும் விளையாடுவீர்கள் எவ்வித அழுத்தமும் இல்லாமல் விளையாடுங்கள் என்று உறுதியளித்துவிட்டேன்.

 

நான் அளித்த உறுதிமொழியை ஏற்று சிறப்பாகச் செயல்பட்டனர். இப்படித்தான் வீரர்களை நாம் உருவாக்க வேண்டும். இரு போட்டிகள் சிறப்பாக செயல்படவில்லை, அடுத்த போட்டியில் விளையாடுவோமா என்ற நிலையற்ற தன்மையுடன் வீரர்களை விடக்கூடாது.நான் அனைத்து வீரர்களுக்கும் சமமான வாய்ப்புகளை அளித்தேன், விளையாட வாய்ப்பும் கொடுத்தேன். வீரர்களின் திறமையை அறிந்து, புரிந்து கொண்டு வாய்ப்பு வழங்கப்பட்டது,'' என தெரிவித்துள்ளார்.

Tags : #VIRATKOHLI #CRICKET #MSDHONI #ASIACUP2018 #ROHITSHARMA