அன்பிற்கு ஏது எல்லை...இந்தியர்களை நெகிழச்செய்த பாகிஸ்தான் ரசிகரின் செயல்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 28, 2018 02:29 PM
India-Pakistan super fan friends prove Cricket \'has no boundaries

கிரிக்கெட் போட்டியை பார்க்காதவர்கள் கூட மறக்காமல் பார்ப்பது இந்தியா,பாகிஸ்தான் போட்டியைத்தான்.இது ரசிகர்களுக்கு மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.அந்த அளவிற்கு ரசிகர்கள் போட்டியை வெறித்தனமாக காண்பார்கள்.அவ்வப்போது ரசிகர்களுக்குள் சிறு சிறு சலலப்பும் வருவதும் உண்டு.இந்நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகரின் பயண செலவை பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் ஏற்ற சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

 

இந்திய கிரிக்கெட் ரசிகர் சுதிர் குமார் சௌத்ரி.இவர் இந்திய கிரிக்கெட்டின் தீவிர ரசிகர்.அதைவிட சச்சினின் படுதீவிரமான ரசிகர்.இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளிலும் ‘மிஸ் யூ சச்சின்’ என்ற வாசகத்துடன் உடல் முழுவதும் மூவர்ண கொடியை பூசிக்கொண்டு மைதானத்தில் வலம் வருவார்.சச்சின் என்னென்ன போட்டிகளில் எல்லாம் பங்கேற்கிறாரோ அந்த போட்டிகளுக்கெல்லாம் சுதிர் குமாரிற்கு டிக்கெட் ஸ்பான்சர் செய்யப்பட்டுவந்தது.

 

தற்போது துபாயில் நடைப்பெற்று வரும்  ஆசிய கோப்பை போட்டிகளில் பங்கேற்க போதுமான பணம் சுதிரிடம் இல்லை.அதோடு அவருக்கு ஸ்பான்சரும் கிடைக்கவில்லை.இதனால் சுதிர் மனவருத்தத்தில் இருந்தார்.இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகரான பஷீர் என்பவர் ஆசியா கோப்பை குறித்து சுதிரிடம் விசாரித்தார்.அப்போது தான் அவர் பணம் இல்லாததால் போட்டியை காண செலவில்லை என்பது குறித்து பஷீர்-க்கு தெரியவந்தது.

 

உடனடியாக சுதிருக்கு டிக்கெட் செலவு மற்றும் தங்கும் செலவை ஏற்று கொள்வதாக தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து, ஆசிய கோப்பை போட்டிகளை காண சுதிர் துபாய் சென்றுள்ளார்.போட்டியின்  போது எதிரும் புதிருமாக இருக்கும் ரசிகர்கள் மற்ற நேரங்களில் ஒருவருக்கொருவர் அன்பை பொழிந்து வருவது அனைவரையும் நெகிழச்செய்துள்ளது.