கதாநாயகனாக களமிறங்கும் கோலி?.. வைரல் போஸ்டர் உள்ளே!

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 21, 2018 01:05 PM
Virat Kohli to debut in a movie.Twitter post leaves fans confused

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அதிரடி ஆட்டத்திற்கு மட்டும் அல்ல விளம்பர படங்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார். நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அனுஷ்காவும் விராட் கோலியும் ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளனர்.அவர் தற்போது ட்விட்டரில் வெளியிட்டுள்ள போஸ்டர் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

அவர் வெளியிட்டுள்ள போஸ்டரில்   விராட் கோலி சூப்பர் ஹீரோவாக வருவதுபோலவும் பின்னணியில் கார்கள் மோதி நிற்பது போலவும் அதிரடியாக உள்ளன. போஸ்டருக்கு கீழே, பத்து வருடத்துக்குப் பிறகு இன்னொரு அறிமுகம். காத்திருக்க முடியவில்லை. என்று குறிப்பிட்டிருக்கிறார் விராட் கோலி.

 

அவர் குறிப்பிடப்பட்டுள்ள அந்த போஸ்டரில் டிரைலர்  என்று டைட்டில் வைத்துள்ளனர். கீழே கேப்ஷனாக, தி மூவி என்று குறிப்பிட்டுள்ளனர். வரும் 28 ஆம் தேதி இது வெளியாகிறது எனக் கூறப்பட்டுள்ளது. இது படத்திற்கான போஸ்டரா அல்லது வேறு ஏதேனும் சர்பிரைஸா என நெட்டிசன்கள் ட்விட்டரில் விவாதிக்க தொடங்கிவிட்டார்கள்