'தோனி அவுட்'.. கேஎல் ராகுலை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 26, 2018 06:18 PM
AsiaCup2018: Netizens bash KL Rahul on Twitter

ஆசிய கோப்பை போட்டி சூப்பர் 4 சுற்றில் நேற்று ஆப்கானிஸ்தான்-இந்தியா அணிகள் மோதின.இதில் 2-வதாக பேட்டிங் செய்த இந்திய அணி போட்டியை டை செய்தது. இதற்கு நடுவரின் 2 தீர்ப்புகள் பிரதான காரணமாக அமைந்தது.

 

முன்னதாக விளையாடிய கே.எல்.ராகுல் தேவையில்லாமல் ரிவியூ கேட்டு ரிவியூவை விரயம் செய்ததால், தோனிக்கு தேவைப்படும் நேரத்தில் ரிவியூ உதவாமல் போய்விட்டது.

 

இந்திய அணி வெற்றி பெற முடியாமல் போனதற்கு ராகுலின் ரிவியூ காரணமாக அமைந்ததால், ரசிகர்கள் இரக்கமின்றி சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

 

குறிப்பாக இங்கிலாந்தில் ரிவியூக்களை விரயம் செய்ததில் ராகுல் புகழ் பெற்றுள்ளார் என்றும், தவறான முடிவால் 2 பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கி விட்டார் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

ராகுல் தனது தவறினை ஒப்புக்கொண்டு பேட்டியளித்தாலும், கேப்டனாக 200-வது போட்டியில் தோனி வெற்றி பெற முடியாமல் போனதற்கு ராகுல் தான் காரணம் என ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #CRICKET #MSDHONI #KLRAHUL #ASIACUP2018