இனிமேல் தல தோனி ரிவ்யூ சிஸ்டம் தான்...ட்விட்டரில் தெறிக்க விடும் ரசிகர்கள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 25, 2018 12:02 PM
Dhoni Review System’ Strikes Yet Again for India and Social Media

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது விறுவிறுப்பான  கட்டத்தை அடைந்துள்ளன. நேற்று முன்தினம் நடைபெற்ற ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

 

போட்டியின் போது தல தோனி கேட்ட 'டிசிஷன் ரிவ்யூ சிஸ்டம்' தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. டிசிஷன் ரிவ்யூ சிஸ்டம் முறையை ‘தோனி ரிவ்யூ சிஸ்டம்’ என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

இதற்கு காரணம்,பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 10 ரன்கள் எடுத்திருந்த போது, இந்திய அணியினர் எல்.பி.டபிள்யு முறையில் ரிவ்யூ கேட்டனர்.இதற்கு முக்கிய காரணம்  தோனியின் உறுதியான நம்பிக்கையே.இதனால் மிக உறுதியாக இந்திய அணி சார்பில் ரிவ்யூ கேட்கப்பட்டது. ரிவ்யூவில், எல்.பி.டபிள்யூ உறுதியாகவே, இமாம்-உல்-ஹக் வெளியேறினார். இந்திய அணிக்கு கிடைத்த முக்கியமான விக்கெட் என்பதால், தோனியின் முடிவை அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.

 

அதனை தொடர்ந்து, டிசிஷன் ரிவ்யூ சிஸ்டம் எனப்படும் முறையை ‘தோனி ரிவ்யூ சிஸ்டம்’ என கூறியபடி தோனி ரசிகர்கள் ட்விட்டரில் மீம்ஸ்களாக தெறிக்கவிட்டு வருகிறார்கள். தல தோனியின் முடிவு என்றுமே தவறாகாது என்றும், அவர் எப்போதுமே சரியாக எதையும் கணிக்கக்கூடியவர் என தோனி ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். ரிவ்யூவின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது

Tags : #MSDHONI #TWITTER #DHONI REVIEW SYSTEM