'பிக்பாஸ் சீசன் 3' நிகழ்ச்சி நீங்கள் செய்வீர்களா?.. கமல் அளித்த பதில் இதுதான்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 30, 2018 08:16 PM
BiggBoss Grand Finale celebration starts

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பிக்பாஸ்  நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நிகழ்ச்சி தற்போது தொடங்கியுள்ளது.

 

மதுரை குலுங்க குலுங்க என்ற பாடலுக்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் ஆட்டத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து விரு விரு மாண்டி விருமாண்டி பாடல் ஒலிக்க கமல் கதவைத்திறந்து கொண்டு வெளியே வந்தார்.

 

அனைவருக்கும் நன்றி என்ற கமல்,'' பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி என்று சொல்வதைவிட நிறைவு என்று சொல்லலாம் எனத் துவங்கினார். விமர்சனங்களைக் கண்டு கொள்ளவில்லை என நினைக்காதீர்கள். அனைத்தும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

 

தொடர்ந்து ரசிகர்களின் கேள்விகளுக்கு கமல் பதில் அளித்தார். அதில் ரசிகை ஒருவர், அடுத்த சீசன் நீங்கள் செய்வீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு கமல் நான் செய்யணுமா? வேணாமா? என கேட்டார்.

 

கண்டிப்பாக செய்யணும் சார் என்க, அதற்கு என்ன பண்ணிட்டா போச்சு என கமல் பதிலளித்தார்.இதனால் கமல் அடுத்த சீசனையும் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.