ஜனனியைத் தொடர்ந்து..பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது இவர்தான்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 30, 2018 05:50 PM
Biggboss Tamil: Actress Vijayalakshmi got 3rd Place

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சற்றுநேரத்தில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரை அதிகாரப்பூர்வமாக  நிகழ்ச்சித்தரப்பினர் அறிவிக்கவுள்ளனர்.

 

நேற்று மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் ஜனனி கடைசி இடத்தைப் பிடித்து வீட்டைவிட்டு வெளியேறினார். இந்தநிலையில் நடிகை விஜயலட்சுமி தற்போது 3-வது இடத்தைப் பிடித்து வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

 

கடந்த சீசனில் டைட்டில் வென்ற நடிகர் ஆரவ், விஜயலட்சுமியை வீட்டுக்குள் சென்று அழைத்து வந்தார். இதன் மூலம் வைல்டு கார்டு எண்ட்ரியாக வீட்டுக்குள் சென்ற விஜி, குறுகிய காலத்தில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.