'பிக்பாஸ் டைட்டிலை அறிவித்த கமல்'.. நெகிழ்ந்து அழுத ரித்விகா!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 30, 2018 11:00 PM
Actress Rithvika won Bigg Boss season 2 Title

பிக்பாஸ் இறுதிப்போட்டிக்கு ஐஸ்வர்யா தத்தா, ரித்விகா, விஜயலட்சுமி, ஜனனி ஐயர் என மொத்தம் நான்கு பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் ரித்விகா முதல் இடத்தையும், ஐஸ் 2-வது இடத்தையும், விஜி 3-வது இடத்தையும் பிடித்திருந்தனர். ஜனனி கடைசி இடத்தில் இருந்தார்.

 

இதனால் டைட்டிலை வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நிலவி வந்தது. மேலும் தமிழ்ப்பெண்களில் ஒருவர் தான் டைட்டிலை வெல்ல வேண்டும் என்ற விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் எழுந்தன.

 

இந்தநிலையில் ரித்விகா பிக்பாஸ் டைட்டிலை தட்டிச்சென்றுள்ளார். கமல் டைட்டில் வின்னராக அறிவித்தபோது நெகிழ்ச்சியில் ரித்விகா அழுதார்.ரசிகர்கள் பலத்த கரவொலிகளை எழுப்பி தங்களது மகிழ்ச்சிகளை தெரிவித்தனர். மேலும்  ஐஸ்வர்யா உள்ளிட்ட சக போட்டியாளர்களும் ரித்விகாவுக்கு,வாழ்த்து தெரிவித்தனர். 2-வது இடத்தை ஐஸ்வர்யாவும், 3-வது இடத்தை விஜியும் பிடித்தனர். வாக்குகள் அடிப்படையில் ஜனனி நேற்றிரவே வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வாழ்த்துக்கள் ரித்விகா...

 

 

Tags : #KAMALHAASAN #BIGGBOSS2TAMIL #RITHVIKA