'தல அஜித் கூட படம் பண்ணனும்'.. சாய்பாபா கருணை கெடைக்குமான்னு தெரியல!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 23, 2018 06:37 PM
This Producer wants to work with Thala Ajith

நடிகர் அஜித் படத்தைத் தயாரிக்க வேண்டும், அதற்கு சாய்பாபா கருணை கெடைக்குமான்னு தெரியல என பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.

 

தல அஜித் நடிப்பில் அடுத்ததாக விஸ்வாசம் படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது. வீரம் படத்துக்குப்பின் சிவா+அஜித் கூட்டணியில் பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

இந்த நிலையில் அஜித் படத்தைத் தயாரிக்க ஆசைப்படுவதாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,''எனக்கு மிகவும் பிடித்த ஒரு கமர்ஷியல் படம் தல-யின் 'வீரம்' with @directorsiva.  பல முறை பார்த்து ரசித்தேன். அப்படி ஒரு காம்பினேஷன், அப்படி ஒரு சூப்பர் கதை கிடைச்சா, லட்டு மாதிரி ஒரு படம் கொடுத்து, ரசிகர்களை கொண்டாட வைக்கலாம். சாய் பாபா கருணை கிடைக்குமான்னு தெரியலை. பார்ப்போம்,'' என தெரிவித்துள்ளார்.

 

தல அஜித்தின் 60-வது படத்தை தான் தயாரிக்கப் போவதாக வெளியான வதந்திகளுக்கு, தனஞ்ஜெயன் இவ்வாறு விளக்கமளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.