விடாமல் 18 கிலோ மீட்டர் விரட்டிய ரசிகர்.. தல என்ன சொன்னாரு தெரியுமா?

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 12, 2018 05:09 PM
Thala Ajith advise his fan, pictures goes viral

தனது காரினை விடாமல் தொடர்ந்து 18 கிலோமீட்டர் விரட்டி, துரத்திய ரசிகருக்கு நடிகர் அஜீத் சொன்ன அறிவுரை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

சமீபத்தில் நடிகர் அஜீத் விஸ்வாசம் படப்பிடிப்பினை முடித்து விட்டு புனேயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். அவரைக்காண ஏராளமான ரசிகர்கள் ஏர்போர்ட்டில் காத்திருந்தனர்.

 

இந்தநிலையில் ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பிய அஜீத்தின் காரை ரசிகர் ஒருவர் விடாமல் விரட்ட, இதனைக்கண்ட அஜீத் தனது காரினை நிறுத்தி அவருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

 

இதுகுறித்து அந்த ரசிகர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து இருப்பதாவது:-

 

”என் வாழ்நாளில் இதோடு நான்கு முறை தலயை சந்தித்து உள்ளேன் இதுவரை புகைப்படம் எடுத்ததில்லை.

 

ஆனால் நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் தலயை சந்தித்தேன் கூட்ட நெரிசலில் கூட தலயுடன் புகைப்படம் எடுக்க முடியவில்லை.

 

தல அவர்களின் காரை பின் தொடர்ந்தோம் 18Km. சற்று தொலைவு தல கார் நிறுத்த சொல்ல டிரைவர் இறங்கி வந்தார்.தல அழைத்தார். தல கூறியது என்னை நெகிழ வைத்தது.. என் தம்பி உன் பெயர் என்ன என்றார்.கணேஷ் என்றேன்.

 

தல உடனே கணேஷ் தம்பி இதுமாதிரி பின் தொடர்ந்து வருவதால் விபத்து ஏற்பட்டால் எனக்கு தான் ரொம்ப கஷ்டமா இருக்கும்..இது தவறு என்றார். உடனே Sorry அண்ணா என்றேன். உடனே தல ”வா கணேஷ் போட்டோ எடுத்துக்க.. ரொம்ப Tired ah இருக்கு அப்படியே எடுத்துக்கிறிங்களா?” என்று கேட்டார்.

 

அதுவே போதும் அண்ணா என்றேன். போட்டோ எடுத்தபின் Viswasam கண்டிப்பா Success ஆகும் சார் என்றேன். Thanks கணேஷ் என்று என் பெயரை மூன்று முறை அழைத்தார். நான் சொர்க்கத்திற்கே சென்று விட்டேன்.

 

என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் 10.11.2018

 

குறிப்பு- விஸ்வாசம் படப்பிடிப்பு தளத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் புகைப்படம் எடுத்திருந்த நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்து வீட்டின் வாசலில் கடைசியாக எடுக்க பட்ட புகைப்படம்.