சூப்பர் ஸ்டாரின் 'பேட்ட'க்காக தள்ளிப்போகிறதா விஸ்வாசம்?

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 22, 2018 10:14 PM
Producer\'s clarify on release date of Thala Ajith\'s Viswasam

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் தற்போது 'விஸ்வாசம்' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

 

 நான்காவது முறையாக அஜீத்-சிறுத்தை சிவா இருவரும் இணைந்துள்ளதாலும், கிராமத்து லுக்கில் அஜீத் தோற்றமளிப்பதாலும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இப்படத்தினை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.

 

இந்தநிலையில் ரஜினியின் பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாவதால் விஸ்வாசம் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

 

இதுகுறித்து தயாரிப்பு தரப்பு தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில்,' கண்டிப்பாக பொங்கலுக்கு விஸ்வாசம் வெளியாகும்,'' என தெரிவித்துள்ளனர்.இதனால் பொங்கலுக்கு விஸ்வாசம் வெளியாவது தற்போது உறுதியாகியுள்ளது.

 

'விஸ்வாசம்' படத்துக்குப் பின்னர் அஜீத் 'தீரன் அதிகாரம் ஒன்று' புகழ் வினோத் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #AJITHKUMAR #NAYANTHARA #VISWASAM #PONGAL2019