பிரஸ்மீட் வைத்து..படத்தை வெளிப்படையாக அறிவிக்க சொன்ன தல!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 18, 2018 03:01 PM
Director Ameer reveals that he was supposed to work with Ajith

பிரஸ்மீட் வைத்து நமது படம் குறித்து வெளிப்படையாக அறிவியுங்கள் என அஜீத் சொன்னதாக இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

 

வடசென்னை படத்தில் ராஜனாக ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் அமீர் சமீபத்தில் நமது தளத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,''பருத்திவீரன் தொடங்குவதற்கு முன்னால் நானும்,அஜீத்தும் ஹோட்டல் அறை ஒன்றாக அமர்ந்து சுமார் 7 மணிநேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

 

அப்போது நாங்கள் இருவரும் சேர்ந்து படமொன்று பண்ணுவதாக இருந்தது. நான் சொன்ன ஒன்லைன் ஒன்று அவருக்கு பிடித்துப்போக நாளைக்கே பிரஸ்மீட் வைத்து நாம் இருவரும் படம் பண்ணுகிறோம் என சொல்லிவிடுங்கள் என்றார். ஆனால் ஒருசில நான் சொல்ல மாட்டேன் என்று சொன்னேன். அதுக்கு நிறைய காரணங்கள் இருக்கு. அதனால் நான் முழுசா முடிச்சிட்டு சொல்வோம். எமோஷனலா முடிவெடுக்க வேண்டாம் என்று சொன்னேன்.

 

அப்போது அவர் நான் கடவுள் படத்தில் நடிக்க கமிட் ஆகியிருந்தார். அதனால் அது வேணாங்க பல பிரச்சினைகள்,சிக்கல்களை உருவாக்கும். இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சு சொல்வோம் என்றேன். இல்ல நாளைக்கே சொல்லிடுவோம் என சொல்லி, எங்களுடன் இருந்த தயாரிப்பாளர் ஒருவரிடமும் சொன்னார். எனினும் நான் அதுகுறித்து வெளியில் சொல்லவில்லை,'' என தெரிவித்துள்ளார்.