என்னால் சகஜமாக இந்த 'ஹீரோக்களுடன்' நடிக்க முடிந்தது: ஜோதிகா

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 03, 2018 08:45 PM
Actress Jyothika talks about her most comfortable costars

சினிமா வாழ்க்கையில் தன்னால் சகஜமாக நடிக்க முடிந்த ஹீரோக்கள் குறித்து, நடிகை ஜோதிகா தெரிவித்திருக்கிறார்.

 

சமீபத்தில் வெளியான செக்க சிவந்த வானம் படத்தில் ஜோதிகாவின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜோதிகாவின் நடிப்பில் காற்றின் மொழி திரைப்படம் வெளியாகவுள்ளது.

 

இந்தநிலையில் இப்படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சியில் தன்னால் சகஜமாக நடிக்க முடிந்த சக நடிகர்கள் குறித்து ஜோதிகா பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,'' 11 வருடங்களுக்கு முன்னால் ராதா மோகன் சார் இயக்கத்தில் மொழி படத்தில் நடித்தேன். தற்போது காற்றின் மொழி படத்தில் நடித்திருக்கிறேன்.

 

என்னுடைய சினிமா வாழ்வில் சூர்யா, அஜீத், மாதவன் ஆகிய 3 ஹீரோக்களுடன் என்னால் சகஜமாக நடிக்க முடிந்தது. அந்த வரிசையில் தற்போது விதார்த்தும் இணைந்திருக்கிறார்,'' என்றார்.

Tags : #AJITHKUMAR #SURIYA #JYOTHIKA