Biggest Icon of Tamil Cinema All Banner

'கடைக்குட்டி சிங்கத்துக்காக' களத்தில் இறங்கிய துரைசிங்கம்!

Home > News Shots > தமிழ்

By |
Surya-Karthi dharshan of Simhachalam Narasimha Temple

விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். கார்த்தி, சாயிஷா, சத்யராஜ், சூரி, பிரியா பவானிசங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தை, சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

 

தெலுங்கில் 'சின்னபாபு' என்ற பெயரில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆந்திராவில் இன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி சூர்யா,பாண்டிராஜ், கார்த்தி, சூரி உள்ளிட்ட படக்குழுவினர் ஆந்திரா சென்றுள்ளனர். அங்கு பிரபலமான சிமாசலம் வராக லட்சுமி நரசிம்ம கோவிலில் அனைவரும் சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார்கள்.

 

சூர்யா-கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் சாமி தரிசனம் செய்யும் புகைப்படங்கள் தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Surya-Karthi dharshan of Simhachalam Narasimha Temple | தமிழ் News.