'இது நியாயமற்றது'.. சன் டிவியிடம் கோரிக்கை வைத்த நடிகை!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 03, 2018 07:27 PM
Actress Trisha request to Sun TV to push 96 Premier to Pongal

நடிகை திரிஷா சன் டிவியிடம் 96 படத்தை இவ்வளவு விரைவாக டிவியில் போட வேண்டாம் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.

 

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்துக்கு விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் வெற்றிகரமாக 5-வது வாரத்தில் 96 திரைப்படம் நுழைந்துள்ளது. 

 

இந்தநிலையில் தீபாவளி ஸ்பெஷலாக 96 திரைப்படத்தை வெளியிடப்போவதாக சன் டிவி அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து நடிகை திரிஷா சன் டிவி நிறுவனத்துக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,'' இது எங்களது 5-வது வாரம். இன்னும் 80% இருக்கைகள் தியேட்டர்களில் நிரம்பி வருகின்றன. இவ்வளவு விரைவாக படத்தை டிவியில் போடுவது நியாயமில்லை என நாங்கள் கருதுகிறோம். அதனால் தயவுசெய்து பொங்கலுக்கு இந்த படத்தை தள்ளி வைக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,'' என கோரிக்கை வைத்துள்ளார்.

Tags : #VIJAYSETHUPATHI #TRISHA #SUNTV