விஜய் சேதுபதி வீட்டில் வருமான வரி சோதனையா? நடந்தது என்ன?

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 28, 2018 05:04 PM
Income Tax Raid at Vijay Sethupathi\'s residence

நடிகர் விஜய் சேதுபதியின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடைபெற்றதாக திரையுலகில் அடுத்தடுத்து வந்த தகவல்கள் பரபரப்பை உண்டாகியுள்ளன.  நடிகர் விஜய் சேதுபதி, குறும்பட இயக்குனர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, நிறைய குறும்படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உச்சம் தொட்ட பின்னர், வெள்ளித்திரையில் அறிமுகமாகி அபார வளர்ச்சியும் அடைந்தவர். ஆரஞ்சு மிட்டாய், ஜூங்கா, மேற்கு தொடர்ச்சிமலை உள்ளிட்ட படங்களை அவரே தயாரித்துமுள்ளார்.


இந்நிலையில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் வளசரவாக்கத்தில் உள்ள அவரது அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றதாக தகவல்கள் வந்துள்ளன.

 

ஆனால் தற்சமயம் வெளிப்புற படப்பிடிப்பில் உள்ள விஜய் சேதுபதி இருக்க, அவரது தரப்பில் இந்த தகவல்களை மறுத்துள்ளனர். வருமான வரித்துறையின் ஆய்வுக்குழுவினரின் வழக்கமான வருமான வரி கணக்கு சீராய்வுதான் மூன்று நாட்களுக்கு முன்னர் நடந்ததாகவும், அது வருமான வரி சோதனை என்பது போல் கூறப்படுவது உண்மைத் தகவல் அல்ல எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : #VIJAYSETHUPATHI #ITRAID