விஜய் சேதுபதியுடன் 'கைகோர்த்த' இளம் இயக்குநர்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Sep 06, 2018 06:31 PM
Vijay Sethupathis next to be directed by Vijay Chander BNS

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக செக்கச்சிவந்த வானம்,96 படங்கள் ரிலீசாக உள்ளன.

 

இந்தநிலையில் கோலிவுட்டின் இளம் இயக்குநர்களில் ஒருவரான விஜய் சந்தர் தனது அடுத்த படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ''எனது அடுத்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். விஜயா புரொடேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

 

இது ஒரு பேமிலி எண்டர்டெயினர் படமாக இருக்கும். 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது.இதுகுறித்த மேலதிக தகவல்கள் விரைவில் வெளியாகும்,'' என தெரிவித்துள்ளார்.