'விஸ்வாசமாய் வருவோம் பொங்கலுக்கு'.. திருவிழாவாகக் கொண்டாடும் ரசிகர்கள்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 25, 2018 10:56 AM
Thala Ajith\'s Viswasam second look revealed, fans reactions

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் தற்போது 'விஸ்வாசம்' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்து வருகிறார்.

 

நான்காவது முறையாக அஜீத்-சிறுத்தை சிவா இருவரும் இணைந்துள்ளதாலும், கிராமத்து லுக்கில் அஜீத் தோற்றமளிப்பதாலும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இப்படத்தினை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டுள்ளனர்.

 

இந்தநிலையில் சற்றுமுன் விஸ்வாசம் படத்தின் 2-வது லுக்கினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு புல்லட்டில் வரும் அஜீத், கைகளை மேலே தூக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த லுக் தல ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

விஸ்வாசம் படத்தில் 'தல'யின் புது லுக் குறித்த ரசிகர்களின் கருத்துக்களை இங்கே பார்க்கலாம்.

Tags : #VISWASAM #AJITHKUMAR #NAYANTHARA #PONGAL2019