சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் '24 வருட' காத்திருப்பு முடிவுக்கு வருமா?

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 24, 2018 01:14 PM
Rajinikanth\'s Petta might be release this Pongal?

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராகத் திகழும் நடிகர் ரஜினியின் 'பேட்ட' திரைப்படம் இந்த பொங்கலுக்கு வெளியாகும் என, சமூக வலைதளங்களில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா, சசிக்குமார், பாபி சிம்ஹா, மகேந்திரன், நவாஸுதீன் சித்திக் என ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் 'பேட்ட' திரைப்படம் உருவாகி வருகிறது.

 

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது.15 நாட்களுக்கு முன்பே படப்பிடிப்பு முடிவடைந்ததால் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் உள்ளனர். இதனால் பொங்கலுக்கு 'பேட்ட' திரைப்படம் வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 

தமிழ்நாட்டின் மிகப்பெரிய பண்டிகை என்பதாலும், தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் வருவதாலும் பொங்கலுக்கு வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவும்.

 

அந்தவகையில் இந்த பொங்கலுக்கு பேட்ட திரைப்படம் வெளியானால் 24 வருடங்கள் கழித்து பொங்கலுக்கு வெளியாகும் ரஜினி படம் என்ற பெருமை 'பேட்ட'க்கு கிடைக்கும்.கடைசியாக 1995-ம் ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் 'பாட்ஷா' வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது. 

Tags : #RAJINIKANTH #RAJINI #PONGAL2019 #PETTA