‘அழாதே.. நீ வலிமையானவள்’:குட்டித் தங்கையின் பாசிட்டிவ் அண்ணன்... நெகிழவைக்கும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 24, 2018 01:02 PM
Big Brother helps sister to put the ball into basket Viral Video

இது புதிய உலகம். ஆனாலும் மனித உறவுகளுக்கு மதிப்பு குறைந்துகொண்டே போகிறது என்று அர்த்தமல்ல. இதற்கு சான்றாய் வைரலாக பரவி வருகிறது ஒரு வீடியோ வீடியோ.  பெண் குழந்தை ஒருவள் ஒரு பாஸ்கெட் பாலை தனக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் கூடையில் போட முயற்சிக்கிறாள்.

 

ஆனாலும் முயற்சியில் தோல்வியுறுகிறாள். அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான் அவளைவிட சற்றே வயதானா அண்ணன். ஆனால் முயற்சியில் தோல்வியுற்ற தங்கை திடீரென தோல்வியைத் தாங்கிக்கொள்ளாமல் பீறிட்டு அழத் தொடங்குகிறாள்.

 

இதைப் பார்த்து மனம் இளகிய அண்ணன் அருகில் ஓடிவந்து தன் குட்டித் தங்கையை சமாதானப் படுத்தி அழுகையைத் தேற்றி, ‘நீ மிகவும் வலிமையானவள்.. அழாதே’என்றுச் சொல்லி முத்தம் கொடுக்கிறான். உடனடியாக பாஸ்கெட் பந்தை அவள் கைகளில் எடுத்துக்கொடுத்து அவளை தூக்கிக்கொண்டு கூடைக்கு நெருக்கமாக செல்ல, அவள் பந்தை சரியாக இம்முறை கூடையில் போடவும் வெற்றிக்களிப்பில் சிரிக்கத் தொடங்குகிறாள்.  இதனை பார்த்து மகிழ்கிறான் அந்த அண்ணன்.

 

நெகிழவைக்கும் இந்த காட்சி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. கலிபோர்னியாவில் நிகழ்ந்த இந்த நெகிழ்ச்சியான தருணத்தை இந்த குழந்தைகளின் தாய், இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி, தன் குழந்தைகள் பாசிட்டிவாகவும் உறவுகளின் மற்றும் உணர்வுகளின் உன்னதம் புரிந்தவர்களாகவும் இருப்பதை எண்ணி மகிழ்வதாக கூறியுள்ளார்.

 

Tags : #VIRAL #VIDEO #BIGBROTHERLITTLESISTER #FAMILY #SPREADTHELOVE #VIRALVIDEOS #POSITIVE