ஒருவேளை இவர்தான் சூப்பர்மேனா? விபத்தில் சிக்கிய நபரின் "அசத்தலான லேண்டிங்"!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 24, 2018 12:58 PM
Hilarious accident happened in kerala goes viral

விபத்தில் சிக்கிய நபர் எந்தவித காயமும் இல்லாமல்,விழுந்து எழுந்து நிற்கும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

 

கேரள மாநிலத்தில் சாலை ஓரத்தில் இருக்கும் தனது வீட்டிற்கு செல்வதற்காக வாகன ஓட்டி ஒருவர் தனது காரை  திருப்புகிறார்.அப்போது எதிர் பக்கத்தில் இருந்து மின்னல் வேகத்தில் வந்த இளைஞர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாகனத்தின் மீது மோதி விடுகிறார்.

 

மோதிய வேகத்தில் தூக்கி எறியப்படும் அந்த வாலிபர்,அவர் மோதிய காரின் மேலே விழுந்து சட்டென்று அதே வேகத்தில் எழும்பி நிற்கிறார்.உடனே காரை ஓட்டி வந்த நபர் வெளியே வந்து காருக்கு ஏற்பட்டிருக்கும் சேதத்தை பார்வையிடுகிறார்.

 

பைக்கில் வந்த வாலிபரும் அவருடைய பொருட்களை எடுப்பதில் மும்முரமாக இருக்கிறார். இந்த காட்சிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.