விபத்தில் பலியானவரது ஆவியை கண்டதால் தற்கொலை:பொறியியல் மாணவனின் உருக்கமான கடிதம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 16, 2018 09:27 PM
shocking mysterious behind Nagpur engineering student\'s suicide

நாக்பூரில் 18 வயதேயான பொறியியல் மாணவர் உளவியல் பிரச்சனைகள் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

நாக்பூரில்  பொறியியல் பயின்றுவந்த சௌரப் நாக்பூர்கார் என்கிற மாணவர் கடந்த சில நாட்களாகவே வகுப்பில் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். பெற்றோர்களிடம் அடிக்கடி எதையோ பார்த்து பயப்படுவதாகக் கூறியுள்ளார். ஆனால் பெற்றோர்கள் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத நிலையில், மாணவர் திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

 

இதனை விசாரித்த போலீசார், மாணவன் எழுதிவைத்த குறிப்புகளை கண்டறிந்துள்ளனர். அதில், மாணவர் சவுரப், விபத்தில் இறந்துபோன ஒரு பையனின் ஆவியை பார்த்ததாகவும், அந்த பையனின் ஆவி கொடுத்த அழுத்தத்தால் தனக்கு இருமுறை சிறிய விபத்துக்கள் நேர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது அனைவரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

எனினும் விபத்தை நேரில் கண்ட மன அழுத்தத்தின் காரணமாக சவுரபுக்கு இவ்வாறு தோன்றியிருக்கலாம், அந்த மனநிலை முற்றி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என வழக்கை முடித்து வைத்துள்ளனர். 

Tags : #SUICIDEATTEMPT #TEENSUICIDE #NAGPUR #SAURABHNAGPURKAR #ACCIDENT #MYSTERIOUS