விபத்தில் சிக்கிய பிரபல இசையமைப்பாளர் பாலபாஸ்கர் மரணம் !

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 02, 2018 02:47 PM
Music Director Bala Bhaskar passed away

கேரளாவில் கடந்த வாரம் கார் விபத்தில் படுகாயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பிரபல இசையமைப்பாளர், வயலின் வித்வான் பாலபாஸ்கர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். தனது மனைவி மற்றும் 2 வயது மகளுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது பள்ளிப்புரம் அருகே கார் விபத்துக்குள்ளானது. இதில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலபாஸ்கரின் மகள் தேஜஸ் வினி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.

 

படுகாயம் அடைந்த பாலபாஸ்கர், லட்சுமி ஆகியோரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் பாலபாஸ்கர் மற்றும் லட்சுமி ஆகியோரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது, இவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் பால பாஸ்கர்  இன்று நள்ளிரவு 12.55 மணிக்கு மரணமடைந்தார்.

 

இவரது மறைவுக்கு கேரளாவில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஏராளனமான இசை கலைஞர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Tags : #KERALA #ACCIDENT #MUSIC DIRECTOR #BALA BHASKAR