‘மித்ரோன்’.. அப்படியே மோடி போலவே மிமிக்ரி செய்து பேசும் ராகுல் காந்தி..வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 16, 2018 08:10 PM
Rahul Gandhi mimics PM Modi at a rally in Madhya Pradesh

இந்திய பிரதமர் நரேந்திர மோடி போலவே மிமிக்ரி செய்து அசத்திய ராகுல் காந்தியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த வாரம் டீ கடையில் பொதுமக்களுடன் டீ அருந்தி ராகுல் காந்தி வைரலானார்.

 

இதேபோல் இம்முறை மத்திய பிரதேசத்தில் பிரச்சார உரை நிகழ்த்திய ராகுல் காந்தி, பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன், பேசிய, ‘மித்ரோன் (என்னுடைய தோழமைகளே).. என்னை நீங்கள்  பிரதமராக்க வேண்டாம்.. சவ்கிதர்(கடைநிலை சேவகன்) ஆக்குங்கள்’ என்று மோடி பேசியதை அப்படியே அவர் குரலில் மிமிக்ரி செய்து பேசிக் காட்டினார். மேலும் மக்களைத்தான் மித்ரோன் என்று மோடி அழைப்பார். அனில் அம்பானியை அனில் அம்பானி என்றே அழைப்பார் என்றும் மோடி போலவே நிறுத்தி இடைவெளிவிட்டு ராகுல் பேசி காட்டினார். 

 

2003-ம் ஆண்டுக்கு பிறகு மத்திய பிரதேசத்தின் மொரெனா பகுதியில் காங்கிரஸ் இம்முறை வெற்றி பெறும் என்று நம்பிக்கை உரை  ஆற்றிய ராகுல், மோடியை மிமிக் செய்து பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   

 

Tags : #RAHULGANDHI #NARENDRAMODI #MITRON #MADHYAPRADESH #MORENA #CHOWKIDAR #RAHULMIMICSMODI