"திடீரென கட்டுப்பாட்டை இழந்த எஸ்கலேட்டர்"...மக்களுக்கு நிகழ்ந்த சோகம்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 24, 2018 11:17 AM
Escalator Accident in Rome 20 people injured

இத்தாலி நாட்டின் ரோம் நகரில் அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில், திடீரென எஸ்கலேட்டர் கட்டுப்பாடை இழந்ததால் அதில் இருந்த மக்கள் கீழே விழுந்து படுகாயமடைந்தார்கள்.இந்த விபத்தில் ரஷ்ய நாட்டை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் அதிக அளவில் சிக்கினார்கள்.

 

இந்த விபத்தில் 20-கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்ததாகவும்,அதிகமான பயணிகளுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதாகவும் ரோம் நகரை சேர்ந்த செய்தி நிறுவனங்கள் தங்களின் செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கின்றன.

 

ரஷ்ய நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர்கள் கடுமையான போதையில் இருந்ததாகவும்,அவர்கள்  எஸ்கலேட்டரில் ஏறும்போது சத்தமாக கூச்சலிட்டு கொண்டும் நடனமாடி கொண்டும் இருந்ததாக சக பயணிகள் தெரிவித்தார்கள்.

 

விபத்தின் போது மக்கள் சாரை சாரையாக  கீழே விழும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

Tags : #ACCIDENT #ESCALATOR #ROME