டிரைவர்கள் செய்த வேலை.. மாணவர்களை ஏற்றிச்சென்று குப்புற கவிழ்ந்த பள்ளி வாகனங்கள்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 23, 2018 01:45 PM
school buses gets into accident-competition between drivers

தேனி மாவட்டம், கம்பத்துக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு தனியார் பள்ளி வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியதில் மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

இம்மாவட்டத்தின் கம்பம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருக்கும் கிராமப்புறங்களில் சுமார் 2000-க்கும்  மேற்பட்ட மாணவர்கள் மேல்நிலை படிப்பு வரை பயின்று வருகின்றனர். பள்ளி வேன் மற்றும் பேருந்துகளில் பள்ளிகளுக்குச் சென்று வரும் மாணவர்களும் இதில் அடக்கம். ஆனாலும் சில பள்ளிகள் சிறிய வாகனங்களில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை ஏற்றிச் செல்வதாக புகார்கள் உள்ளன. 

 

இந்நிலையில்,  இன்று காலை கூடலூரில் இருந்து கம்பம் நோக்கி வந்த இரண்டு பள்ளி வாகனங்கள் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு முந்த முயற்சித்ததால் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி வளைவில் குப்புற கவிழ்ந்து விழுந்துள்ளன. இதனால் பல மாணவர்கள் படுகாயம் அடைந்ததையடுத்து மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். 

Tags : #ACCIDENT #SCHOOLSTUDENT #THENI