"மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார்":ஆசிரியரை சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 22, 2018 02:31 PM
Teacher has attacked by public due to sexual harassment complaint

செங்கம் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரையடுத்து,ஆசிரியரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

 

செங்கம் அருகே உள்ள கண்ணக்குருக்கை மேல்நாச்சிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு கணித ஆசிரியர் கண்ணன் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவித்திருக்கிறார். ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோரும் உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர்.

 

அப்போது வகுப்பறையில் இருந்த ஆசிரியர் கண்ணன் மீது பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் சரமாரியான  தாக்குதலில்ஈடுபட்டார்கள்.அப்போது  அந்த ஆசிரியருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் ஆசிரியர் கண்ணனை  விசாரணைக்காக அழைத்து சென்றார்கள்.

Tags : #SEXUALABUSE #SCHOOLSTUDENT #TEACHER