"நீ சம்மதிக்கலைன்னா அவ்வளவுதான்"...பெண்ணின் பாலியல் மிரட்டலால் உயிரை மாய்த்த இளைஞர்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 16, 2018 02:59 PM
Married man commits suicide coworkers constant demand for sex

மருத்துவமனையில் உடன் பணி புரிந்த பெண்ணின் பாலியல் தொந்தரவால் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ளது.

 

மகாராஷ்டிரா மாநிலம் பார்பனி நகரைச் சேர்ந்தவர் சச்சின் மிட்கரி.அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளார். அவருடன்  பணி புரிந்து வந்த பெண் ஒருவர், சச்சினுக்கு பாலியல் ரீதியாகத் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார்.மிட்கரி அந்த பெண்ணை பலமுறை கண்டித்திருக்கிறார்.ஆனால் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து அவருக்கு தொந்தரவு கொடுத்து கொண்டே இருந்திருக்கிறார். 

 

இதனால் மனமுடைந்த சச்சின் கடந்த ஞாயிற்றுக்கிழமை  தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். சச்சின் வீட்டுக்கு வந்த போலீஸார் அவரின் உடலை உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முன் சச்சின் மிட்கரி எழுதியிருந்த கடிதம் காவல்துறையினரிடம் சிக்கியது.

 

அந்த கடிதத்தில் "தன்னுடன் பணியாற்றும் பெண் ஒருவர் தான் திருமணம் ஆனவன் என்று தெரிந்தும், தன்னுடன் பாலியல் ரீதியாக உறவு வைத்துக்கொள்ளுமாறு தொடர்ந்து  தொல்லை கொடுத்ததாக அவர் எழுதியுள்ளார். மேலும், அதற்கு நான் சம்மதிக்கவில்லை என்றால் அவரை நான் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாக போலீஸில் புகார் அளிப்பேன் என்று மிரட்டினார்'' என்றும் அவர் எழுதியுள்ளார்.

 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் அந்த பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags : #MUMBAI #SEXUALABUSE #MAN HANGS SELF #SACHIN MITKARI