'ரோஹித்தை கட்டிப்பிடித்து முத்தம்'.. போட்டிக்கு ஆள் வந்ததாக புலம்பித்தள்ளிய மனைவி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 16, 2018 11:27 AM
Rohit Sharma get kissed by fan, his wife jealous

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவை ரசிகர் ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க அதைப்பார்த்த அவரது மனைவி ரித்திகா புலம்பித் தள்ளியிருக்கிறார்.

 

விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. தற்போது மும்பை, பீஹார், ஜார்க்கண்ட், டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய 4 அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.இதில் பெங்களூரில் நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் மும்பை அணி பீஹார் அணியை மிகச்சுலபமாக 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

 

நேற்று பீஹார் அணிக்கு எதிராக ரோஹித் சர்மா ஆடிக்கொண்டிருந்த போது மைதானத்துக்குள் நுழைந்த ரசிகர் ஒருவர், ரோஹித் சர்மாவை கட்டிப்பிடித்து அவருக்கு முத்தம் கொடுத்தார்.

 

 

இதைப்பார்த்து அனைவரும் சற்றுநேரம் திகைத்து நிற்க தொடர்ந்து சுதாரித்துக் கொண்ட அம்பயர் அவரை வெளியே விரட்டி விட்டார். இதனைக்கண்ட ரோஹித் மனைவி ரித்திகா, ''ரோஹித்துக்கு முத்தம் கொடுப்பதில் உனக்கும்,எனக்கும் போட்டியாக இன்னொரு ஆள் வந்துவிட்டான்,'' என கிரிக்கெட் வீரர் சாஹலை டேக் செய்து கிண்டலடித்துள்ளார்.பதிலுக்கு சாஹல் இங்கு என்ன நடக்கிறது பாபி? என கேட்டிருக்கிறார்.

Tags : #CRICKET #MUMBAI #ROHITSHARMA