'நிராகரித்தவர்கள் மத்தியில் நினைவுகூர்ந்த சச்சின்'.. கண்ணீர் விட்டழுத பிக்பாஸ் போட்டியாளர்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Oct 16, 2018 02:51 PM
Bigg Boss 12: Sreesanth recalls incident involving Sachin Tendulkar

கிரிக்கெட் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் பேட்டி ஒன்றில் தன்னை நினைவு கூர்ந்த தருணத்தை எண்ணி, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அழுதிருக்கிறார்.

 

2011-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி கோப்பை வென்று சாதித்துக் காட்டியது. சுமார் 28 வருடங்களுக்குப்பின் இந்திய அணி கோப்பை வென்றதால் நாடு முழுவதும் இந்திய ரசிகர்கள் அதனைக் கோலாகாலமாகக் கொண்டாடித் தீர்த்தனர்.

 

தற்போது சூதாட்ட வழக்கில் சிக்கி கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீசாந்த், உலகக்கோப்பை வென்ற அணியில் முக்கிய வீரராக இருந்தார்.தற்போது அவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டுள்ளார்.

 

நேற்று பிக்பாஸ் வீட்டில் ஸ்ரீசாந்த், சச்சின் டெண்டுல்கர் குறித்த நெகிழ்வான தருணமொன்றை பகிர்ந்தார். அப்போது அவர் கூறுகையில்,'' உலகக்கோப்பை வென்ற 1-2 வருடங்கள் கழித்து சச்சின் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளர் உலகக்கோப்பை அணியில் இருந்த ஒவ்வொரு வீரர்களின் பெயர்களையும் சொல்லி அவர்கள் குறித்து சச்சினிடம் கேட்டார்.

 

ஆனால் அவர் எனது பெயரை மட்டும் சொல்லவில்லை. அந்த நேர்காணல் முடிவடையும் தருவாயில் எனது பெயரை நினைவுகூர்ந்த சச்சின், உலகக்கோப்பை போட்டியில் ஸ்ரீசாந்த் பங்கு முக்கியமானது,'' என என்னை நினைவு கூர்ந்தார்.அப்போது நான் உடைந்து போய் வெகுநேரம் அழுதேன்,'' என தெரிவித்தார்.

 

 

Tags : #CRICKET #SACHINTENDULKAR #SREESANTH