ஆஷ்டங்க யோகா புகழ் கிருஷ்ண பட்டாபி ஜோய்ஸ் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 18, 2018 03:01 PM
Ashtanga yoga guru Krishna Pattabhi Jois Accused Sexual Assaults

ஆஷ்டங்க யோகாசன குரு ஸ்ரீ கிருஷ்ண பட்டாபி ஜோய்ஸ் #MeToo சர்ச்சையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவரிடத்தில் 90-களில் யோகாசனம்  பயின்றபோது தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக, அவரிடம் யோகாசனம் பயின்ற பெண்மணி ஒருவர் பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ளது பெருத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

 

ஆஷ்டங்க வின்யாச யோகம் முறையை இந்த யோகாசன வகுப்பின் மூலம் சொல்லித் தருவதாக தன்னிடம் உடல் ரீதியான தொடுதல் முறையில் ஆபாசமாக நடந்துகொண்டதாக  கரின் ரெய்ன் கூறியுள்ளார்.

 

நியூ யார்க்கில் பிறந்து நியூ ஜெர்ஸியில் வளர்ந்த கரென் ரெய்னுக்கு தற்போது 52 வயதாகிறது. ஆனால் கிருஷ்ண பட்டாபி ஜோய்ஸிடம் யோகாசனம் கற்றுக்கொண்ட காலக்கட்டத்தில், ஏதும் அறியாமல் அப்பாவியாக தான் இருந்த அவ்வயதில் தன்னை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்துள்ளதை மிகவும் தாமதமாகவே தான் அறிந்துகொண்டதாக பத்திரிகை ஒன்றில் குறிப்பிட்டுள்ள செய்தி மேற்கொண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

1915-ல்  மைசூரில் பிறந்து, யோகமாலா உள்ளிட்ட புத்தகங்களை எழுதிய ஸ்ரீ கிருஷ்ண பட்டாபி ஜோய்ஸ் 2009-ம் ஆண்டு காலமானது குறிப்பிடத்தக்கது.

Tags : #METOO #METOOINDIA #SEXUALABUSE #SRI KRISHNA PATTABHI JOIS #KARENRAIN #ASHTANGAYOGA