வங்கிக்கடன் பெற மேனேஜர் போட்ட கண்டிஷன்.. வெளுத்து வாங்கிய பெண்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 16, 2018 03:49 PM
Woman thrashes a bank manager for asking sexual favours Viral Video

கர்நாடகாவின் தேவநாகிரியில் வங்கி மேலாளர் ஒருவரை நடுரோட்டில் வைத்து வெளுத்து வாங்கும் வீர தீர பெண்மணியின் செயல்தான் இணையத்தில் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது. வங்கி மேனேஜரிடம், 15 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் கோரிய இந்த பெண்ணுக்கு, இந்த லோனை பெற்றுத் தர வேண்டும் என்றால் தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தியிருக்கிறார் வங்கி மேனேஜர். 

 

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணோ, அந்த மேனேஜரை நடுரோட்டில் வைத்து கட்டையாலும் காலணியாலும் அடித்து, கன்னத்தில் அறைந்து காவல் துறையினரிடம் இழுத்துச் சென்றுள்ளார். இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவைப் பார்த்த பலரும், இந்த பெண் தான் உண்மையான மீடூ வாரியர் என்று இந்த பெண்ணின் செயலை பாராட்டிள்ளனர். 

Tags : #METOO #METOOINDIA #KARNATAKA #DAVANAGERE