நடிகரை, வீரப்பன் கடத்திய வழக்கு: 18 ஆண்டுகளுக்குப்பின் இறுதித்தீர்ப்பு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 25, 2018 03:58 PM
The Kidnap of Actor Rajkumar by Veerapan case gets its final verdict

கன்னட நடிகர் ராஜ்குமார் ஈரோட்டில் இருந்த தன்னுடைய பண்ணை வீட்டில் கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் இணைந்து கடத்தப்பட்டார். அதன் பின், சுமார் 108 நாட்கள் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ராஜ்குமார் வீரப்பனால் விடுவிக்கப்பட்டார். இவ்வழக்கினை கோபிசெட்டிப்பாளையம் 3-வது கூடுதல் மாவட்ட  அமர்வு நீதிமன்றம் கவனித்து வந்தது.

 

இந்நிலையில் இந்த அமர்வு நீதிமன்றம், கிட்டத்தட்ட 18  வருடங்களுக்கு பிறகு ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து, அதுமட்டுமல்லாமல், கடத்தப்பட்ட ராஜ்குமாரோ, அவரது மனைவியோ கடத்தல்காரர்களுக்கு எதிராக ஒருமுறை கூட சாட்சி அளிக்கவில்லை என்றும், குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றும் கூறி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Tags : #VEERAPAN #RAJKUMARKIDNAPCASE #VERDICT #ACTORRAJKUMAR #TAMILNADU #KARNATAKA