’காலாண்டு விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு’.. செங்கோட்டையன்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 19, 2018 07:44 PM
TN Schools-No Special Classes should be conducted in Term Holidays

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கிய காலாண்டு தேர்வுகள் வரும் செப்டம்பர் 22-ம் தேதி வரை நடத்தப்படுகிறது.  இந்நிலையில் வரும் செப்டம்பர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 02-ம்  தேதி வரை பள்ளிகளுக்கு காலண்டுத் தேர்வு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

       


ஆனால் இந்த விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை எந்த பள்ளியும் நடத்தக் கூடாது என்றும், சிறப்பு வகுப்புகளை சீருடைகள் அன்றி சாதாரணமாகக் கூட மாணவர்களை பள்ளிக்கு வரச்சொல்லி வகுப்பெடுத்தல் கூடாது எனவும் கடுமையாக அறிவுறித்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

Tags : #SCHOOLSTUDENT #STATEBOARDEXAM #EXAM #SENGOTTAIYAN #TAMILNADU #SCHOOLEDUCATIONALDIRECTIONBOARD