ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலையில் திருப்பம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 17, 2018 04:01 PM
Twist in suicide of ECR retired sub-inspector

சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் உள்ள மர்மங்கள் கட்டவிழ்ந்துள்ளன. சென்னை ஈசிஆர் என்று சொல்லப்படும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து, ஓய்வு பெற்ற 64 வயது மதிக்கத்தக்கவர் கலை. இவர் தனது வீட்டில், வீட்டு வேலைகளுக்காக பணிபுரிந்து வந்த, 30 வயது மதிக்கத்தக்க வேலைக்கார இளம் பெண்ணை ரகசியமாக திருமணம்  செய்துகொண்டுள்ளார். அந்த தகவல் சப்-இன்ஸ்பெக்டரின் வீட்டாருக்கு தெரிந்துவிட்டதால், வேலைக்கார பெண் வேலையை விட்டு நின்று விட்டார்.

 

அதன் பின் வேலைக்கார பெண், சென்னையின் மையப் பகுதியில் குடியிருக்கத் தொடங்கினார். அவரை சில நாட்களுக்கு முன் சந்தித்த சப்-இன்ஸ்பெக்டர் கலைக்கும் அந்த பெண்ணுக்கும் ஏற்பட்ட தகராறின் காரணமாக, சப்-இன்ஸ்பெக்டர் கலை தற்கொலை செய்துகொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

 

போலீஸ் வேலையைச் செய்யும் ஒருவருக்கு அவரின் வேலை நிமித்தமாக பலருடைய அச்சுறுத்தல், ஆபத்து இருக்கும், அதனால் அவர் தற்கொலை செய்திருக்கக் கூடும் என எதிர்பார்த்திருந்த காவல் துறையினருக்கு கலை விஷயத்தில் நடந்திருப்பது அதிர்ச்சிதான். இந்த நிலையில் காவலர்கள் மேற்கொண்டு விசாரணையைத் தொடங்கியுள்ளார்கள்.

Tags : #SUICIDEATTEMPT #COPSSUICIDE #TAMILNADU #ECR