வேலை கிடைக்காததால் தொடர் ஏ.எடி.எம் மோசடியில்.. 22 வயது ஐடிஐ இளைஞன்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 16, 2018 06:52 PM
22 age Unemployed ITI Commits Serial ATM Thefts

வேலையில்லா திண்டாட்டம் என்று சொல்லிக்கொண்டு ஒவ்வொருவரும் அடுத்தவர்களை சுரண்ட தொடங்கினால் யார்தான் வாழமுடியும் என்கிற அச்சத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது வேலூரைச் சேர்ந்த இளைஞனின் ஏ.எடி.எம்.திருட்டு சம்பவம்.

 

ஐடிஐ மெக்கானிக் படித்த 22 வயதேயான இளைஞன் விஜயன், படிப்பு முடிந்ததும் வேலை கிடைக்காததால், அரக்கோணம் பகுதிகளில் உள்ள ஏ.டி.எம்களை பார்த்துக்கொண்டே ரோந்தில் ஈடுபட்டுள்ளார். அங்கு ஏ.டி.எம்களில் பணம் எடுக்க வருபவர்கள் பலருக்கு ஏ.டி.எம்-கார்டினை சரியாக பயன்படுத்தும் அளவுக்கு போதிய கல்வியறிவு இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட விஜயன், அவ்வாறு வருபவர்களுக்கு உதவி செய்வதாகச் சொல்லி அவர்களுக்கு பணம் எடுத்துக்கொடுப்பதுபோல், பணத்தை தான் எடுத்துக்கொள்வது உள்ளிட்ட மோசடிகளை செய்து வந்துள்ளார்.

 

இந்த தகவலை அறிந்த அரக்கோணம் போலீசார், விஜயனை பொறி வைத்து பிடித்துள்ளனர். மேலும் விசாரித்ததில் வேலை கிடைக்காததால்  இவ்வாறு தான் செய்துள்ளதாக விஜயன் ஒப்புக்கொண்டதை அடுத்து, போலீசார் விஜயனை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளனர்.

Tags : #ATMSCAM #YOUTH #CRIME #TAMILNADU #UMEMPLOYMENT