பிரியாணியை அடுத்து ‘ஓசி’ பெட்ரோலுக்காக ‘பாக்ஸிங்’ செய்த இளைஞர்களுக்கு சிறை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 16, 2018 04:01 PM
Chennai Teens committed crime by attacking petrol pump employers

பெட்ரோல் விலை பெருகி வருவதால், முன்னதாக பிரியாணிக்காக பாக்ஸிங் செய்ததை போலவே தொடர்ந்து, தற்போது  பெட்ரோலுக்காக பாக்ஸிங் செய்யத் தொடங்கிவிட்டார்களோ என்று எண்ணும் அளவுக்கு அரங்கேறியுள்ளது ஒரு பெட்ரோல் பாக்ஸிங் சம்பவம்.  திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் இரவு நேரம் பைக்கில் வந்தவர்கள் சலீம், கோபிநாத், பிரதீப்.

 

இவர்கள் மூவரும் அங்குள்ள பெட்ரோல் பங்குக்கு வந்து பைக்கில் பெட்ரோல் போட்டுவிட்டு, ஊழியர்கள் பணம் கேட்டதும் அங்கிருந்து நகரத் தொடங்கியுள்ளனர்.  அவர்களை ஊழியர்கள் விரட்டிப்பிடித்து பணம் கேட்டதும், ஊழியர்களின் கைகளை எடுத்துவிட்டு சலீமும் தனது நண்பர்களும் பெட்ரோல் பங்க் ஊழியர்களை சரமாரியாகத் தாக்கத் தொடங்கியுள்ளனர்.

 

இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதை அடுத்து, ஊழியர்களால் அங்குள்ள காவல்க்துறைக்கு உடனடியாக புகார் அளிக்கப்பட்டதன் பேரில் காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.  விசாரணைக்கு பின்பு, பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் முறைகேடாக நடந்துகொண்ட இளைஞர்களை போலீசார் சிறைபிடித்தனர். பின்னர் பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தி, ஆஜர்படுத்தப்பட்ட பிறகு சலீம் உள்ளிட்ட மூவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : #ATTACK4FREEPETROL #PETROLHIKE #TEENS #CRIME #CHENNAI #PETROLBOXING