வீடியோ எடுத்தவர்கள் கைது.. டெல்லி இளம் பெண்ணை சப்-இன்ஸ்பெக்டர் மகன் துன்புறுத்திய சம்பவம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 16, 2018 03:26 PM
Updates on Delhi Cop\'s Son Thrashing a women in a video

டெல்லியில் இளம் பெண்ணை, வாலிபர் ஒருவர் ஈவிரக்கம் இன்றி தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பார்ப்பவர்களை உலுக்கியது. டெல்லியின் திலக் நகரில்,  எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், கருணையின்றி கொடூரமாக இளம் பெண் ஒருவரை சரமாரியாக அடித்து துன்புறுத்திக் கொண்டிருந்த இளைஞர் ரோகித் சிங் தோமர். 

 

டெல்லி செண்ட்ரல் மாவட்டத்துக்கு உட்பட்ட  சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார் தோமரின் மகனான ரோகித்தின் இந்த அரக்கத்தனமான செயலுக்கு பிறகு இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படாத நிலையில், ரோகித்தை திருமணம் செய்யவிருந்த மணப்பெண்ணே முன்வந்து, திலக் நகரில்  அவர் மீது புகார் அளித்து, நடக்கவிருந்த திருமணத்தையும் நிறுத்தினார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணும் ரோகித் மீது எழுத்துப்பூர்வமாக உத்தம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  மேலும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் வலியுறுத்தலின்பேரில் காவல்துறையினர் ரோகித் சிங் தோமரை கைது செய்தனர்.

 

இந்நிலையில், இந்த கொடூரச் செயல் அடங்கிய வீடியோவை எடுத்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. டெல்லி பல்கலைக் கழகத்தில் 2ம் ஆண்டு பி.ஏ பயின்று வந்த ரோகித்தும், வீடியோவில் ரோகித்தால் துன்புறுத்தப்படும் இளம் பெண்ணும் காதலித்து வந்த நிலையில், ரோகித்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகியது. அந்த சமயத்தில்தான் ரோகித்தை காதலித்த பெண் ரோகித்தின் அழைப்பின்பேரில், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெல்லி ஹாட்ஸ்டால் சாலையில் உள்ள ஒரு தனியார் கால் செண்டருக்கு சென்றுள்ளார்.

 

அதன் பின் நடந்தவற்றை வீடியோவாக பதிவு செய்தவர் ரோகித்தின் நண்பரும் அந்த கால் செண்டரின் உரிமையாளருமான அலி ஹாசன் என்பவர்தான். இதே வீடியோவில் குறுக்கே நடந்து வருபவர்தான் அங்கு பணிபுரியும் பியூன் ராஜேஷ். தீவிர விசாரணைக்கு பிறகு டெல்லி கமிஷ்னர் அமுல்யா பட்நாயக் தலைமையிலான காவல் படை. இளம் பெண்ணை அடைத்து வைத்து சித்ரவதை செய்தது, மிரட்டல் விடுத்தது, பாலியல் துன்புறத்தல் மற்றும் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகளுக்கான பிரிவுகளில் அனைவரையும் கைது செய்துள்ளது.

 

Tags : #SEXUALABUSE #DELHI #VIRAL #VIOLENCE #VIDEO #RAPE #CHAUDHARY_ROHIT_TOMAR