ரொனால்டோ செய்த வினோதமான காரியம்.. ட்ரெண்டிங் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 14, 2018 07:36 PM
Cristiano Ronaldo hilariously photobombs the reporter trending video

கால்பந்துக்கும் தெரியும்  கிறிஸ்டியானோ ரொனால்டோ யார் என்று. அண்மையில் உலகப் புகழ் பெற்ற கால்பந்து கிளப் என்று அறியப்படும், ஜூவண்டோவுக்காக ஃபுட்பால் விளையாடிக்கொண்டிருக்கிறார்.

 

அண்மையில் ஜூவண்டோ க்ளப்பின் கால்பந்து விளையாட்டு மைதானத்தில் பயிற்சி முடிந்ததும், அங்கு ஜூவண்டோ க்ளப் ரிப்போர்ட் ஒருவர் வந்து நின்று தன்னுடைய சேனலுக்கான செய்தியை ரிப்போர்ட் செய்துகொண்டிருக்கிறார்.  அப்போது அவரின் பின்னால் வேகமாக ஓடிவரும் ரொனால்டோ, ரிப்போர்ட்டர் பேசுவது போலவே வாயசைத்து டப்பிங் செய்து அவரை ட்ரோல் செய்திருக்கிறார். ஆனால் ரிப்போர்ட்டரோ தனக்கு பின்னால் ரொனால்டோ நின்று தன்னைக் கலாய்க்கிறார் என்பதை அறியாமல்  பேசிக்கொண்டிருக்கிறார். எனினும் அந்த வீடியோவை எடுத்த கேமராமேன் நிச்சயமாக அதை கவனித்துள்ளார் என்றறிய முடிகிறது. எனினும் அவரும் ரொனால்டோ செய்த நகைச்சுவையான காரியத்தை ரசித்துள்ளார் என்பது தெரிகிறது.

 

போர்ச்சுகியூஸைச் சேர்ந்த 33 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ எந்த அளவுக்கு ஃபுட்பாலில் சீரியஸான ஆட்டக்காரரோ அதே அளவிற்கு நகைச்சுவை உணர்வும் கொண்டவர் என்பதை பலர் அறிவர்.  அதை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக ரொனால்டா டப்பிங் செய்து ரிப்போர்ட்டரை கலாய்க்கும் வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

 

Tags : #CRISTIANO RONALDO #FOOTBALL #TRENDING #VIRAL #VIDEO #RONALDOMAKINGFUN