இளம் பெண்ணை குரூரமாக தாக்கும் போலீஸ்காரரின் மகன்..வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 14, 2018 06:22 PM
Police\'s Son Mercilessly Thrashes Women Video Goes Viral

டெல்லி: இளம் பெண்ணை, வாலிபர் ஒருவர் ஈவிரக்கம் இன்றி தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பார்ப்பவர்களை உலுக்கி வருகிறது. டெல்லியின் திலக் நகரில், ஒரு அலுவலகத்தினுள் நடக்கும் இந்த வீடியோவில், கருணையின்றி கொடூரமாக இளம் பெண் ஒருவரை சரமாரியாக அடித்து துன்புறுத்தி தாக்குபவர் ரோகித் சிங் தோமர். 

 

ரோகித்தின் அலுவலக சக-ஊழியரான அந்த பெண்ணை ரோகித் தன் அலுவலகத்துக்கு அழைத்து, பலாத்காரம் செய்ததோடு, அந்த பெண்ணின் கை, கால் மூட்டுகளில் குரூரமாக தாக்கும் இந்த வீடியோவை ரோகித்தின் அருகில் இருந்த  அவரது நண்பர்களே எடுத்துள்ளனர்.  

 

டெல்லியில் பணிபுரியும் ஒரு  சப்-இன்ஸ்பெக்டரின் மகனான ரோகித்தின் இந்த அரக்கத்தனமான செயலுக்கு பிறகு இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படாத நிலையில், ரோகித்தை திருமணம் செய்யவிருந்த மணப்பெண்ணே முன்வந்து,  அவர் மீது புகார் அளித்து, நடக்கவிருந்த திருமணத்தையும் நிறுத்தியுள்ளார். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணும்  ரோகித் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.

 

இதனை அறிந்து, இந்த  வீடியோவில் உள்ள நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த குரூரமான செய்தி தன் கவனத்துக்கு வந்ததாகவும், டெல்லி கமிஷனரிடம் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும்  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். செப்டம்பர் முதல்வாரம் நடந்த இந்த சம்பவத்தை அடுத்து, இந்த குற்றத்துக்காக போலீஸ்காரரின் மகனான ரோகித் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags : #SEXUALABUSE #DELHI #VIRAL #VIOLENCE #VIDEO #RAPE ##CHAUDHARY_ROHIT_TOMAR