பிளாஸ்டிக் பையால் மூடி, 13 வயது பார்வையற்ற மகனை கொன்ற தாய்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 16, 2018 02:52 PM
Woman Mercilessly kills visually impaired son of her

சென்னை ஆலந்தூரை அடுத்த பரங்கிமலையில் உள்ளது இந்திரா நகர். இங்கு கணவரால் கைவிடப்பட்ட நிலையில் வசித்து வந்தவர் பத்மா. இவருக்கு கண்பார்வையற்ற நிலையில் 13 வயது  மகன் இருந்தார். சுமார் 2 ஆண்டுகளுக்கு முன், தாயாரும் இறந்துவிட்ட நிலையில் தனிவாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்த பத்மா, வெறுத்துப்போய் பெற்ற மகன் என்று பாராமல், பிளாஸ்டிக் பைக்குள் முகத்தை அடைத்து கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின் தானும் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

 

தன் முயற்சி தொல்வியுற்றதும் சுயநினைவுக்கு வந்த பத்மா, மீண்டும் மகனை எடுத்துக்கொண்டு மருத்துவமனை சென்றுள்ளார். அங்கு, மருத்துவர்கள் மகன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக  சொல்ல, காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் பத்மாவை விசாரித்ததில், உண்மையை ஒப்புக்கொண்ட பத்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

தாய் என்றாலே கருணையின் வடிவானவள் என்கிற உருவகம் சில செய்திகளைக் காணும்போது மாறத்தான் செய்கிறது. பெற்ற மகனை கண்பார்வைக் குறைபாட்டுடன் இருக்கும் காரணத்தால் அவனை கரைசேர்க்க முடியாது என்று எண்ணி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயற்சித்த தாயின் இந்த செயல் பலரையும் உருக்கியுள்ளது.

Tags : #MURDER #WOMENKILLSSON #WOMENKILLSBLINDSON