சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்.. மாணவர்கள், கண்டுகொள்ளாத பள்ளி இயக்குனர் கைது!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 17, 2018 01:23 PM
Minor Boys Sexually assaulted at school by seniors

மஹாராஷ்டிராவில் இருந்து 500 கி.மீ தூரத்தில் இருக்கும் பார்பானி மாவட்டத்தில் உள்ளது வெடிக் பள்ளி. இப்பள்ளியில் முறையே 10, 13 வயதுடைய இரண்டு மாணவர்கள், சிறுவர்களை ராகிங் செய்து துன்புறுத்திய சம்பவம் அச்சத்தை எற்படுத்தியது.

 

பார்பானியின் காவல்துறை இணை ஆணையர்  சஞ்சய் பர்தேஷி இதுபற்றி கூறும்பொழுது 9 முதல் 10 வயதுகொண்ட அந்த சிறுவர்களின் உடல் உறுப்புகளில் ’மாஞ்சா’ கயிற்றால் கட்டி குரூரமாக தாக்கி துன்புறுத்தியுள்ளனர்.

 

அது மட்டுமன்றி சிறுவர்கள் பெரிய மாணவர்களால் பாலியல் வன்மத்துக்குள்ளாக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள், இப்பள்ளியின் 42 வயதான இயக்குனரிடம் புகார் அளித்தும் அவர் கண்டுகொள்ளாததை அடுத்து,  இம்மாணவர்களின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் பள்ளி இயக்குனர் கைது செய்யப்பட்டார். மேலும் சிறுவர்களை துன்புறுத்திய மாணவர்கள் ஜீவனைல் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Tags : #SEXUALABUSE #SCHOOLSTUDENT #MAHARASHTRA #MINORBOYS #JUVENILE JUSTICE BOARD