டீ விற்று கேரளாவிற்கு நிதிதிரட்டிய பள்ளி மாணவர்கள் !

Home > News Shots > தமிழ்

By Jeno | Sep 01, 2018 02:20 PM
Students of school in Latur of Maharashtra raise Rs 51,000 for kerala

கேரளாவில் பெய்த தென்மேற்கு பருவமழை அந்த மக்களின் வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டது. 300-கும் மேற்பட்ட மக்கள் வெள்ளம்,நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கி உயிர் இழந்தார்கள்.2000 கோடிக்கும் மேல் கடும் இழப்பை சந்தித்து இருக்கிறது கடவுளின் தேசம்.

 

இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாத்தலமான கேரளாவிற்கு இது மிக பெரிய இழப்பாகும்.சுற்றுலா தொழிலை நம்பி பல குடும்பங்கள் தங்களின் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள்.இந்நிலையில் இது அவர்களின் வாழ்க்கையில் பெரும் இடியாக விழுந்துள்ளது.இந்த சூழ்நிலையிலிருந்து அவர்கள் மீண்டுவர பல்வேறு தரப்பினரும் பல உதவிகளை செய்து வருகின்றார்கள்.பல்வேறு மாநில அரசுகள்,அரசு ஊழியர்கள்,பல்வேறு நிறுவனங்கள் என பலரும் தங்களின் ஒருமாத ஊதியத்தை கேரளாவிற்கு வழங்கி வருகிறார்கள்.

 

இந்நிலையில் மும்பையின் லாத்தூர் மாவட்டத்திலுள்ள ஹரிவன்ஷ்ராய் பச்சன் வித்யாலயா பள்ளி மாணவர்கள் டீ கடை நடத்தி அதன் மூலம் கிடைத்த வருமானத்தை கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி அனைவரையும் நெகிழ வைத்துள்ளார்கள்.

 

டீ கடை மூலம் கிடைத்த பணம் 51000 ரூபாய்க்கான காசோலையை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பாட்னவிஸ்விடம் பள்ளி மாணவர்கள் வழங்கியுள்ளார்கள்.