சொந்த ஊருக்கு திரும்ப முயற்சித்த 31 வங்கதேச மக்கள் ரயில்நிலையத்தில் கைது!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 16, 2018 03:20 PM
Illegally entered 31 Bangladeshis apprehended in guwahati railway

வங்கதேசத்தின் பகர்பத் பகுதியைச் சேர்ந்த 8 பெண்கள் மற்றும் 13 குழந்தைகள் உள்ளிட்ட, 31 குடிமக்கள் இந்திய எல்லைக்குள் சட்டத்துக்கு புறம்பாக நுழைந்துள்ளதை அடுத்து அவர்கள், அஸ்ஸாம் அருகே, கௌவ்ஹாத்தி ரயில்வே ஸ்டேஷனில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் அகர்தலா வழியாக வங்காளதேசத்துக்கு சென்றுகொண்டிருந்த இம்மக்கள், கடந்த 3 வருடங்களாக இந்தியாவில் சிறுசிறு வேலைகளைச் செய்துகொண்டிருந்தவர்கள் என்றும், இந்திய குடிமகன்கள் என்பதற்கு எவ்வித ஆதாரமும் அற்றவர்கள் என்றும், கௌவ்ஹாத்தி ரயில்நிலைய துணை கண்காணிப்பாளர் இஃப்தாகர் அலி கூறியுள்ளார். 

Tags : #BANGLADESHNATIONALS #INDIA #ASSAM