Aan Devadhai All Banner

டாக்டர்கள் மருந்து பெயர்களை புரியும்படி எழுதுகிறார்களா? ஐஎம்சி தீவிரம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 10, 2018 06:46 PM
Doctors will be fined if prescription is not clear, Says IMC

பொதுவாகவே இந்திய மருத்துவர்கள், கொடுக்கும் மருந்து சீட்டுகளில் மருந்துகளின் பெயர்கள் புரிவதில்லை என்ற குற்றச் சாட்டு நீடித்து வருகிறது. இதன் முக்கிய காரணம், டாகடர்களின் மொழி பார்மஸி படித்தவர்களுக்கே புரிய வேண்டும், பொதுமக்களுக்கு புரிந்துவிட்டால், மருத்துவர்களின் ஆலோசனை இன்றி அடுத்தடுத்த முறை நோயாளிகளே  இன்ன நோய்க்கு இன்ன மருந்து என்று தீர்மானித்துவிட்டு வாங்கத் தொடங்கிவிடுவர். அதனால் தவறுதலான விளைவுகள் உண்டாகலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

 

ஆனால்  பெரும்பாலான பார்மஸிகளில் முறையான பார்மஸி படித்தவர்களை அமர்த்தாமல் டிரெய்னீக்களை அமர்த்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஒரு எழுத்து மாறி புரிந்துகொண்டால் மாத்திரைகளையும் மருந்துகளையும் தவறாக புரிந்துகொள்வதற்கான  வாய்ப்பு இருப்பதால், இனி மருத்துவர்கள் புரியும்படியாக மருந்துகளின் பெயர்களை தெளிவாக ஆங்கிலத்தில், ‘கேபிட்டல்’ எழுத்துக்கள் எனப்படும் பெரிய எழுத்துக்களில் எழுதவேண்டும் என்று முன்னதாக இந்திய மெடிக்கல் கவுன்சில் உத்தரவிட்டிருந்தது.

 

இல்லையேல் மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறியிருந்தது. ஆனால் இந்த உத்தரவினை நிறைய மருத்துவர்கள் பின் தொடராததாலும், தொடர்ந்து மருத்துவர்கள் இதேபோலவே புரியாதபடியாக எழுதுவதாகவும் எழுந்த புகார்களை எடுத்து ஐ.எம்.சி எனப்படும் இந்திய மருத்துவ ஆணையம், இதனை தீவிரமாகக் கண்காணிக்க முடிவு செய்துள்ளது.

Tags : #INDIA #MEDICAL #MEDICINE #DOCTORS #PRESCRIPTIONS #DOCTORSHANDWRITING #IMC #INDIANMEDICALCOUNCIL