13 ஆயிரம் அடி உயரத்தில் ’பறந்து’, மோடியை வாழ்த்திய பெண்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 18, 2018 06:05 PM
Woman Jumps From 13,000 Ft To Wish Narendra Modi

பிரதமர் நரேந்திர மோடி மிக அண்மையில் தன்னுடைய 68வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு பல நாடுகளில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் பிறந்தநாள் வாழ்த்துக்களை பலரும் கூறினர்.

 

இந்நிலையில் இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று அமெரிக்காவில் வாழும் இந்திய ’ஸ்கை டைவர்’ என்று அழைக்கப்படும் வானத்தில் ஸ்கை டைவிங் செய்யும் ஷீட்டல் மஹாஜன் என்கிறவர் கிட்டத்தட்ட 13 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தில் இருந்து பாராசூட்டுடன் குதித்து தன்னுடைய கையில் ஏந்தியபடி பிரதமர் மோடிக்கு வாழ்த்து செய்தியை சொல்லி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். 

 

இந்த புகைப்படங்களும் அவர் பகிர்ந்திருந்த வீடியோக்களும் வைரல் ஆனதையொட்டி தன்னை மோடியின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக நம்பியிருக்கிறார். மேலும் அடுத்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து சொல்லும்படியாக இதேபோன்றதொரு வித்தியாசமான களத்தில் அவருக்கு வாழ்த்து சொல்லவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

Tags : #NARENDRAMODI #SHEETALMAHAJAN #LOKHSABHAELECTION2019 #INDIA #MODI