பெரியார்-மோடி பிறந்த நாள்.. பாஜக உறுப்பினர் ஷூ வீச்சு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 17, 2018 04:20 PM
Leaders condemn BJP cadre who threw slipper at Periyar statue

சென்னையில் கலைஞர் திறந்து வைத்த, பெரியார் சிலை மீது, பிஜேபி பிரமுகர் ஒருவர் ஷூ வீசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. திராவிடர் கழகத்தை உருவாக்கிய 140வது பிறந்த தினத்திற்கு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் வைகோ, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரின் சிலையை கவுரவித்தனர்.

 

இந்த நிலையில் சென்னை ஈக்காட்டுத் தாங்கலைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகதீஷ் எனும் பாஜக உறுப்பினர், இருசக்கர வாகனத்தில் ஷூவை வீசியதால் சிந்தாதிரி போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதற்கு ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

 

இதேபோல் தாராபுரத்தில் பெரியார் சிலை மீது காலணிகளை வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பாகியுள்ளது. பெரியார் பிறந்த இதே தினம்தான், பாஜக சார்பாக ஆண்டுகொண்டிருக்கும் பாரத பிரதமர் மோடிக்கும்  பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #PERIYAR #BJP #NARENDRAMODI #PERIYARSTATUE #PERIYAR140 #CHENNAI