பேருந்துகள்; தியேட்டர்கள் இயங்கவில்லை: புதுச்சேரி-பெங்களூருவில் ’பாரத் பந்த்’ தீவிரம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 10, 2018 11:34 AM
Bharat Bandh Set to Hit Services in Puducherry and Bangalore

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பாரத் பந்த் நாடு முழுவது இன்று நடக்கும் என காங்கிரஸால் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது.  இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்டோர் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

 

காங்கிரஸ் ஆதரவு அமோகமாக உள்ள புதுச்சேரியில் அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இன்று வெகுவாக இயக்கப்படவில்லை;  மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  கடலூரில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் புதுச்சேரிக்கு பதில் விழுப்புரம் வழியாக இயக்கப் படுவதோடு, முழுஅடைப்புப் போராட்டத்தால் புதுச்சேரியில் இன்று பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

 

புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் இன்று பகல் மற்றும் பிற்பகல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பாரத் பந்த் காரணமாக தமிழகத்தில் பெரிய பாதிப்பு இல்லை என்றும், சென்னை உள்ளிட்ட இடங்களில் வழக்கம்போல் அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல் தமிழ்நாட்டை ஒப்பிடுகையில் பெங்களூரு-கர்நாடகாவில்  காங்கிரஸின் பேராதரவோடு பாரத் பந்த் வெற்றிகரமாக நிகழ்வதாகத் தெரிகிறது.

Tags : #CONGRESS #BJP #BHARATBANDH