'ஊழலில் ஈடுபட்டதால்தான் மக்கள் காங்கிரஸை ஒதுக்கினர்': மோடி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 13, 2018 05:08 PM
\'People Set Aside Congress Because of their corruption\', Says Modi

நரேந்திர மோடி பாஜக-வின் பிரதமர் வேட்பாளராக கடைசி 15 மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் பிரதமராகி கடந்த ஐந்து வருடங்கள் ஆட்சி புரிந்துள்ளார்.

 

ஆனால் ஐந்தாண்டுகள் முடிவடையும் நிலைக்கு நெருங்கிவர,  பாஜக-வின் வாக்குச் சாவடி பொறுப்பாளர்களிடையே இன்று பேசிய பிரதமர் மோடி,  கடந்த 4 வருடங்களில் காங்கிரஸ் யார் என்பது வெளிப்பட்டிருக்கிறது என்றும் சரியான முடிவுகளை எடுக்காமல் ஊழலில் ஈடுபட்டதால்தான் மக்கள் காங்கிரஸை ஒதுக்கி வைத்தனர் என்றும் பேசியுள்ளார்.

 

அதுமட்டுமல்லாமல், பாஜகவினர் தங்களது வாக்கு சாவடிகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் இனிவரும் மாநில தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல்களை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என்றும் நமோ ஆப் கலந்துரையாடலில் தனது கட்சி தொண்டர்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளார்.

Tags : #BJP #CONGRESS