டிஜிபி வருவதை கவனிக்காமல் சல்யூட் அடிக்க தவறிய காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 13, 2018 04:00 PM
Cops fail to recognize and salute UP DGP, suspended

உத்திரப்பிரதேச மாநில டிஜிபி ஓ.பி.சிங் முன்னதாக தேசிய மீட்பு படை, பிரதமர் பாதுகாப்பு படை மற்றும் மத்திய பாதுகாப்பு படை உள்ளிட்டவற்றின்‌ உயர் அதிகாரியாக முக்கிய பணியாற்றியுள்ளார்.

 

அனைவரும் பார்த்து பயந்து நடுங்கும் அளவிற்கு உயர் அதிகாரியான இவர் தன் காவல்துறை வாகனத்தில்  உத்தரப்பிரதேசம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டு இருந்தார். அப்போது நொய்டா செல்லும் வழியில் உள்ள அமரப்பள்ளி அருகே சென்றபோது, அங்குள்ள செக்போஸ்டில் டிவிஷன் 39 காவலர்கள் இருவரும், ’வருவது காவல்துறை உயரதிகாரி என்பதை அறியாமல்’  சல்யூட் அடிக்காமல் அலட்சியமாக நின்றிருந்துள்ளனர். டிஜிபியின் வாகனம் அருகில் வந்த பிறகே இருவரும் உள்ளிருந்தது டிஜிபி என்று அறிந்துகொண்டுள்ளனர்.

 

மேலும் அவர்கள் பணி நேரத்தில் தாங்கள் அணிய வேண்டிய காவலர் தொப்பியினையும் அணியாமல் அதனை ஜிப்ஸியிலேயே வைத்துவிட்டு பேசிக்கொண்டிருந்துள்ளனர். இதனைப் பார்த்த உயர் அதிகாரி ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக அலட்சியமாக இருந்த இரண்டு காவலர்களையும் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக  எஸ்.பி.அஜய்பால் சர்மா தெரிவித்துள்ளார்.

Tags : #POLICE